Tuesday, May 7, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஷாருக்கானின் டிரைலர்.. இதென்ன புதுசா இருக்கு

    நடிகர் விஜய் வெளியிட்டுள்ள ஷாருக்கானின் டிரைலர்.. இதென்ன புதுசா இருக்கு

    ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டார்.

    இந்தியத் திரைத்துறையின் முக்கிய நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படமானது ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இதை முன்னிட்டு, பதான் திரைப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிரபலங்கள் பதான் திரைப்படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் நடிகர் விஜய் பதான் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார்.

    பெரும்பாலும், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய் தன் திரைப்படங்கள் சார்ந்த விஷயத்தை தவிர வேறு எதையும் பகிர மாட்டார். இந்நிலையில், பதான் திரைப்படத்தின் டிரைலரை பகிர்ந்திருப்பது பெரிய ஆச்சரியத்தை திரைத்துறையில் ஏற்படுத்தியுள்ளது.

     மேலும், அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் ஜவான் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டிரைலர் விழாவில் கண்ணீர் விட்ட சமந்தா; காதல் நிலையானது என பேச்சு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....