Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதோல்வியுடன் ஓய்வு பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை!

    தோல்வியுடன் ஓய்வு பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை!

    27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தில் இருந்து செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெறுகிறார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் பிரபல அமெரிக்க வீராங்கனை, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் 7-5, 7-6, 6-1 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    முன்னரே அறிவித்தபடி, இந்தப் போட்டியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார். செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

    இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார்.

    ஆனால், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த அவர், வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். அதன்படியே ஓய்வு பெற்றார். 

    கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....