Sunday, May 5, 2024
மேலும்
    Homeஅறிவியல்வியாழன் இவ்வளவு பெரிதாய் இருக்க இதுதான் காரணமா?? நரமாமிச உண்ணியா வியாழன்?

    வியாழன் இவ்வளவு பெரிதாய் இருக்க இதுதான் காரணமா?? நரமாமிச உண்ணியா வியாழன்?

    சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருக்கும் வியாழன், மிகப்பெரிய கோள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வாயுக்களால் உருவான இந்த கோள் பார்ப்பதற்கு மிகவும் வண்ணமயமாய் இருக்கும்.

    எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது 79 துணைக்கோள்களுடன் அமைதியாக சூரியனை வலம் வந்துகொண்டிருக்கும் வியாழனைப் பற்றி இதுவரை அறியப்படாத தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

    உருவில் சிறிய கோள்களை தனது ஈர்ப்பு சக்தியினால் தன் பக்கம் இழுத்து, அவற்றினை விழுங்கியதன் மூலமே வியாழன் கோளானது இவ்வளவு பெரிய உருவத்தினை அடைந்துள்ளது என்ற விடயத்தினை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

    இந்த கண்டுபிடிப்பின் மூலம் வியாழன் கோளின் ஈர்ப்புவிசை பற்றியும், அது எவ்வாறு சிறு சிறு கோள்களை விழுங்கியது என்பது பற்றியும் அறிந்து கொள்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.

    அண்டத்தின் கொள்கைகள் படி வியாழன் கோளின் இந்த செயலானது நரமாமிசம் உண்ணுதலுக்கு ஈடாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் வான்வெளியில் இம்மாதிரியான விடயங்கள் மிகவும் பொதுவான ஒன்றாகும்.

    வாயுக்களினால் உருவான வியாழன் கோளின் மையப்பகுதியானது எப்படி இருக்கும் என்ற ஆராய்ச்சியானது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்காக வியாழன் கோளினைப் பற்றித் தெரிந்துகொள்ள அனுப்பிய ‘ஜூனோ’ என்னும் செயற்கைகோள் அளித்த தரவுகள் பயன்படுத்தப்பட்டது.

    ‘ஜூனோ செயற்கைக்கோளானது வியாழனின் ஈர்ப்பு விசை பற்றிய துல்லியமான தகவல்களை அளித்துள்ளது. இந்த தகவல்கள் வியாழனின் மையப்பகுதியில் என்ன இருக்கிறது என்பதினைக் கண்டறிய பெரிதும் உதவியாய் இருந்துள்ளது. இந்த தகவல்களை வியாழனைச் சுற்றும் செயற்கைக்கோள்களால் மட்டுமே கொடுக்க முடியும்.’ என்று முன்னணி ஆராய்ச்சியாளர் யமிலா மிகுவல் கூறியுள்ளார்.

    இந்த தரவுகளை வைத்து ஆராய்ந்து பார்த்த விஞ்ஞானிகளுக்கு வியப்பான முடிவு கிடைத்தது. வியாழன் ஒரு வாயுக்கோளாக இருந்தாலும், அதன் மையப்பகுதியானது கடினமான தனிமங்களால் உருவாகியுள்ளது. இந்த கடினமான தனிமங்கள் மற்ற கோள்களை விழுங்கியதனால் உருவாகி இருக்கலாம் என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

    கூடுதல் தகவல்..

    பூமியிலிருந்து பார்க்கையில் செவ்வாய்க்கு அடுத்து வியாழன் உள்ளது. சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன், பிற விண்கற்கள் பூமியில் விழுந்து ஆபத்துகள் ஏற்படுத்துவதை தடுக்கிறது.

    தனது ஈர்ப்பு விசையின்மூலம் பூமியினை நோக்கிச் செல்லும் மிகப்பெரிய அளவிலான விண்கற்களை தனது பக்கம் வியாழன் ஈர்த்துக்கொள்வதால் பெரும் அபாயத்திலிருந்து பூமி தப்பித்துக்கொள்கிறது.

    சூரியக் குடும்பத்தில் சூரியனுக்குப் பிறகு உருவான முதல் கோள் வியாழன் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....