Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: நோட்டுப் புத்தகங்கள் விலை உயர்வால் பெற்றோர்கள் கவலை!

    தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: நோட்டுப் புத்தகங்கள் விலை உயர்வால் பெற்றோர்கள் கவலை!

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், கடந்த கல்வியாண்டில் தான் சில மாதங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு, ஆண்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டது. பிறகு கொளுத்தும் கோடை வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு, மாணவர்கள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்லத் தயாராகி உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். பள்ளிகள் திறப்பையொட்டி, மாணவர்களின் வருகையை எதிர்நோக்கி ஸ்டேஷனரி கடைகள் சுறுசுறுப்பாகியுள்ளது.

    அனைத்து வகுப்புகளுக்கான புத்தகங்களும், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. நோட்டுப் புத்தகம், பேப்பர், பென்சில் மற்றும் இரப்பர் உள்பட மாணவர்களுக்குத் தேவையான பொருட்களை வெளிகடைகளில் பெற்றோர்கள் வாங்கித் தருகின்றனர். விற்பனையை எதிர்நோக்கி, கூடுதலாக நோட்டுப் புத்தகங்களை வியாபாரிகள், இருப்பு வைக்கத் துவங்கி உள்ளனர்.

    பள்ளிகள் திறப்பு குறித்து திருப்பூர் ஸ்டேஷனரி பொருள் வியாபாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகளைத் திறப்பதில் இழுபறி நீடித்து வந்தது. நடப்பாண்டில் 2 மாதங்களுக்கு முன்பாகவே, பள்ளி கோடை விடுமுறை எப்போது மற்றும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இதுவரையிலும் நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்களுக்கு GST வரிவிதிப்பு இல்லை.
    நடப்பாண்டு ஜி.எஸ்.டி., கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 20 – 25% வரை விலை உயர்ந்துள்ளது.

    28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய நோட்டு, 36 முதல் 38 ரூபாயாக அதிகரித்துள்ளது. 15 முதல் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நோட்டின் விலை, 25 ரூபாயாக அதிகரித்துள்ளது. பேனா, பென்சில், இரப்பர் மற்றும் ஜாமெட்ரி பாக்ஸ் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்திருப்பது, பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    ஸ்கூல் பேக்கை பொறுத்த வரையில், சிறிய ரகம் 100 ரூபாய் முதலும், பெரிய ரகம் 600 ரூபாய் வரையிலும் விற்பனைக்கு உள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டும் பள்ளி மாணவர்களுக்கு ‘பேக்’ தர இருப்பதால், பெற்றோர்கள் பலரும் புதிய பேக் வாங்க முன்வருவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    ஆன்லைனில் கடன் மோசடி: மன அழுத்தத்திலும், அச்சத்திலும் வாழும் இந்தியர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....