Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபோக்குவரத்துக் கழகத்தின் 'நியாயமற்ற' பேருந்துக் கட்டணம்! வெறுப்பில் மக்கள்!

    போக்குவரத்துக் கழகத்தின் ‘நியாயமற்ற’ பேருந்துக் கட்டணம்! வெறுப்பில் மக்கள்!

    தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்தின் ‘நியாயமற்ற’ பேருந்துக் கட்டண உயர்வால் நகர மாணவர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.

    தினமும் பயணச்சீட்டு வாங்கி பேருந்தில் பயணம் செய்தால் செலவு அதிகமாகும் என்பதால் மாணவர்கள் மாதாந்திர பயண சலுகையை நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது மாதாந்திர பயண சலுகை பெறுவதற்கான கட்டணம் முந்தைய தொகையை விட இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய அதிரடியான அதிகரிப்பு நியாயமற்றது என்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பயண சலுகை சீட்டு மாணவர்களிடையே மிகவும் மதிப்புக்குரியது. ஆனால் இதன் திடீர் விலை உயர்வு பல மாணவர்களைப் பாதிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

    தெலுங்கானா பேருந்து கட்டணம் மற்றும் மாணவர்களின் பேருந்து பயண அட்டையின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் நகர மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC) மாணவர்களின் பேருந்து பயண அட்டையின் விலையை கிட்டத்தட்ட 130% உயர்த்தியுள்ளது. முன்பு மாதத்திற்கு ரூ 195க்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பயண அட்டை தற்போது மாதம் ரூ 450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசலின் மீதான வரி அதிகரிப்பால் மாநிலம் முழுவதும் TSRTC பேருந்து கட்டணமும் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவர்களுக்கான மாதாந்திர பயண அட்டையின் விலை உயர்வு குறிப்பாக ஏழை மாணவர்கள் மற்றும் தொலைதூர கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் நகரங்களில் உள்ள மாணவர்களை பாதிக்கும் வண்ணம் உள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். தினமும் பேருந்தில் பயணச் சீட்டு வாங்கி கல்லூரி சென்றால் செலவு அதிகம். அதனால், மாணவர்கள் மாதாந்திர பேருந்து பயண அட்டையையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஆனால், தற்போது பேருந்து பயண அட்டை கட்டணம் முந்தைய தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இத்தகைய அதிரடியான அதிகரிப்பு நியாயமற்றது” என்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர். மாதாந்திர பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு மதிப்புக்குரியது. ஆனால் இந்த திடீர் விலை உயர்வு பல மாணவர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநில போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனர் V.C சஜ்ஜனார் இந்த திடீர் விலையேற்றத்தினைக் குறித்து விளக்கம் அளிக்கையில், 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதல் பெரிய அதிகரிப்பு ஆகும். “பல ஆண்டுகளாக சிறிய அதிகரிப்புகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பேருந்து பராமரிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கருத்தில் கொண்டு இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    “டிஎஸ்ஆர்டிசி இன்னும் நகரத்தின் மலிவான போக்குவரத்து முறையாகவே உள்ளது ,” என்று அவர் கூறியுள்ளார். கூடுதல் டீசல் செஸ் விதிப்பது மற்றும் மாணவர்களுக்கான பஸ் பாஸ் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற திட்டங்கள் மாநகராட்சி அதன் இயக்கச் செலவில் ஒரு பகுதியை மட்டுமே வசூலிக்க உதவும். தெலுங்கானா போக்குவரத்துக் கழகம் தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 30 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளையும், சுமார் 12 லட்சம் மாணவர்களையும் கொண்டு செல்கிறது.

    அரிதான நோயினால் அவதிப்படும் ஜஸ்டின் பீபர்! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....