Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி போன் வந்தால் 'ஹலோ'க்கு பதில் 'வந்தே மாதரம்' சொல்லணும்! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு...

    இனி போன் வந்தால் ‘ஹலோ’க்கு பதில் ‘வந்தே மாதரம்’ சொல்லணும்! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு…

    இனி தொலைபேசியில் பேசும்போது ஹலோ சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் என கூறவேண்டுமென மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு ஒன்று பிறப்பித்துள்ள உத்தரவு பெரும் பேசுபொருளாய் மாறியுள்ளது.

    அதாவது, மகாராஷ்டிராவில் இனி தொலைபேசியில் பேசும்போது ஹலோ சொல்வதற்கு பதிலாக வந்தே மாதரம் என கூறவேண்டுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தொலைபேசியில் குடிமக்கள் அல்லது அதிகாரிகளிடம் பேசும்போது ‘ஹலோ’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக ‘வந்தே மாதரம்’ என்று கூறிய தங்களது பேச்சை தொடங்க வேண்டும்.

    தங்களை சந்திக்க வரும் பொதுமக்களிடம் ‘வந்தே மாதரம்’ என்று சொல்லை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மேலும், ஹலோ என்ற வார்த்தை மேற்கத்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பு.  ஹலோ என்ற வார்த்தைக்கு எந்தவித அர்த்தமும் இல்லை ஆதலால் பேசும் நபரிடம் எந்தவித பிணைப்பையும் ஹலோ ஏற்படுத்தாது.

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவன்; வித்யாசமான முறையில் மலையேறிய காதல் காட்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....