Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர் கொண்டவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு பிரியாணி 1 வாரத்திற்கு இலவசம்!

    பொன்னியின் செல்வன் கதாபாத்திர பெயர் கொண்டவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு பிரியாணி 1 வாரத்திற்கு இலவசம்!

    திருச்சி மற்றும் சென்னையில் இயங்கி வரும் பிரியாணி கடை ஒன்றில் சோழ மன்னர்களின் பெயர் வைத்தவர்களுக்கு பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கல்கி எழுதிய புகழ்ப்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 தேதி வெளியாகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், திருச்சியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் சோழ மன்னர்களின் பெயர் வைத்திருப்பவர்களுக்கு பிரியாணி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து ஹக்கீம் பிரியாணி கடையின் அறிவிப்பில், ‘சோழ மன்னர்களின் பெயர்களான சுந்தரச்சோழர், அருண்மொழிவர்மன், ஆதித்ய கரிகாலன், வந்நியத்தேவன், குந்தவை, பூங்குழலி ஆகிய பெயர்களை கொண்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கி கவுரவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, சோழ மன்னர்களின் பெயர்களைக் கொண்டவர்கள், தங்களது ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    free briyani for ponniyin selvan characters name

    இத்தகைய சூப்பர் அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ஹக்கீம் பிரியாணி கடை திருச்சி மற்றும் சென்னையில் இயங்கி வருகிறது. மேலும் இந்தக் கடையின் உரிமையாளாரன திருச்சி கே.எம்.எஸ்.ஹக்கீம், தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் முக்கியப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 9 ஆம் நூற்றாண்டை கண் முன் நிறுத்திய மணிரத்னம்! பொன்னியின் செல்வன் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....