Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி நடவடிக்கை

    சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை! நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அதிரடி நடவடிக்கை

    ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 

    சமூக வலைதளத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. 

    இதையும் படிங்க: குப்பைத் தொட்டியில் வெட்டி கிடந்த ‘கை’.. அலறி ஓடிய தூய்மைப் பணியாளர்கள் – கோவையில் பரபரப்பு

    உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கிரிமினல் அவமதிப்பு வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்தது. 

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த வழக்கில் அவமதிப்பு நடவடிக்கையாக சவுக்கு சங்கர்-க்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. 

    இதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டார். இந்நிலையில் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இது ஏன் என விளக்கம் கேட்க, நிர்வாக காரணங்கள், அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....