Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதிஅரேபியா வரலாற்று வெற்றி; விடுமுறை அறிவித்த அரசர்..

    அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவுதிஅரேபியா வரலாற்று வெற்றி; விடுமுறை அறிவித்த அரசர்..

    சவுதி அரேபியா 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 

    கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பையானது விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வியக்கத்தகும் விஷயங்களும் நடைபெற்று வருகின்றன. 

    அந்த வகையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவரான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டீனா அணியை, சவுதி அரேபியா அணி வீழ்த்தியுள்ளது. அர்ஜென்டீனாவின் இந்தத் தோல்வி கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், அர்ஜென்டீனா அணி தொடக்கத்திலேயே கோல் அடித்து அசத்தியது. அர்ஜென்டீனா பக்கமே ஆட்டம் சென்றுக்கொண்டிருந்த நிலையில், சவுதி அரேபியா திடீரென இரண்டு கோல்களை அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

    இதனால், சவுதி அரேபியா 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணியை தோற்கடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. சவுதி அரேபியாவின் இந்த வெற்றி, அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

    இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகள், அனைத்து அரசு, தனியார் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார். பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நேற்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களில், டென்மார்க் – துனிசியா, மெக்சிகோ -போலந்து ஆட்டங்கள் கோல் எதுவுமின்றி டிராவில் முடிவடைந்தன. பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை 4-1 என வீழ்த்தியது.

    கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....