Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்; உயர்கிறதா கடல் மட்டம்?

    அண்டார்டிகாவில் வேகமாக உருகும் பனிப்பாறைகள்; உயர்கிறதா கடல் மட்டம்?

    அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் கணித்ததை விட வேகமாக உருகுகிறது. இது உலகளாவிய கடல் மட்ட உயர்வு விகிதத்தை வேகப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

    காலநிலை மாற்றம் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று அண்டார்டிகா பனி பாறைகள் குறித்த புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் முதல் கட்ட ஆய்வு மேற்கொண்டனர். 

    இந்நிலையில், இப்புகைப்படத்தை வைத்து ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், காலநிலை மாற்றமானது அண்டார்டிகாவின் பனி அடுக்குகளை பலவீனப்படுத்துகிறது என்று கூறியுள்ளனர். மேலும், அண்டார்டிகாவின் பனி அடுக்குகள் கணித்ததை விட வேகமாக உருகுகிறது. இது உலகளாவிய கடல் மட்டத்தை உயர்த்த செய்கிறது. இந்நிகழ்வானது,  இயற்கையாக பனிப்பாறைகள் கரைந்து விழுவதை விட அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ஆராய்ச்சியாளர் சாட் கிரீனி கூறியதாவது :

    கடந்த கால் நூற்றாண்டில் பனிக்கட்டிகள் நிகர இழப்பு கிட்டத்தட்ட 37,000 சதுர கிமீ இது சுவிட்சர்லாந்தின் பரப்பளவு. அண்டார்டிகா வேகமாக உருகி வதுகிறது. பனி கட்டிகள் பலவீனமடையும் போது, பெரிய பாறைகளும் வேகமாக உருகும். இது உலகளாவிய கடல் மட்ட உயர்வு விகிதத்தை வேகப்படுத்தும்.

    இதன் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும். உலகத்தில் உள்ள அனைத்து பனிக்கட்டிகளின் கடல் மட்ட ஆற்றலில் 88% அண்டார்டிகாவில் உள்ளது. 

    இவ்வாறு ஆராய்ச்சியாளர் சாட் கிரீனி கூறினார். 

    ஐந்து வெண்கல சிலைகள் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....