Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்'மேற்குல நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் உயிர்கள் பறிபோகின்றன' - உக்ரைன் பகிரங்கம்!

    ‘மேற்குல நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் உயிர்கள் பறிபோகின்றன’ – உக்ரைன் பகிரங்கம்!

    மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் தினந்தோறும் உக்ரைன் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று உக்ரைன் நாட்டு ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்துள்ளார். 

    அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதாக அறிவித்த நிலையில், இதனால் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக அறிவித்து ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. 

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போர் தற்போது வரை நீடித்த வண்ணம் உள்ளது. இந்தப் போரால் இதுவரையில் லட்சக்கணக்கில் மக்கள் உக்ரைனிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 

    தொடர்ந்து போர் நீடித்து வரும் சூழலில், உக்ரைனுக்கு கடந்த வெள்ளிக் கிழமை அன்று, சுமார் 50 நாடுகள் உக்ரைனுக்கு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்களை வழங்க ஒப்புக் கொண்டன. 

    அதன்படி, தற்போது கனரக வாகனங்கள், வெடிமருந்துகள் ஆகியவை ரஷ்யாவுக்கு எதிராக போராட உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜெர்மனி மட்டும் பீரங்கிகளை வழங்குவதற்கு சற்று தயங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. 

    இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் இது சமந்தமாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதைத் தவிர்த்து இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேறு வழியில்லை என்று தெரிவித்தார். 

    மேலும், மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத தன்மையால் தினந்தோறும் உக்ரைன் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும், தாமதமாகும் ஒவ்வொரு நாளும் ஏராளமான உயிர்கள் பறிபோகின்றன. எனவே விரைவாக யோசியுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லரின் மேக்கிங் வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....