Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லரின் மேக்கிங் வீடியோ!

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லரின் மேக்கிங் வீடியோ!

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேநேரம், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘நானே வருவேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

    இதைத்தொடர்ந்து, ராக்கி, சாணிக்காயிதம் என வெற்றித்திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். 1930-களின் பின்னணியில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. 

    இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது. பிரம்மாண்டமாக செட் போடும் காட்சிகள் இடம்பெற்ற இந்த வீடியோவானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கேப்டன் மில்லர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன், சிவ்ராஜ் குமார், பிரியங்கா மோகன் போன்றோர் நடித்துவர சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....