Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்கணவனை இழந்த பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் - பாஜக அறிவிப்பு!

    கணவனை இழந்த பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் – பாஜக அறிவிப்பு!

    மேகாலயா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ‘விஷன் டாக்குமெண்ட் 2023’ என்ற பெயரில் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். 

    மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் வருகிற மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. 

    இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கிறது. இதனிடையே பாஜகவின் வாக்குறுதிகளை ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டுள்ளார். 

    இது தொடர்பாக ஜெ.பி.நட்டா, மேகாலயாவில்  பாஜக ஆட்சிக்கு வந்தால் ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும் என்றும், பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் மதிப்பிலான பத்திரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    பெண் குழந்தைகளுக்கு மழலைக் கல்வி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று தெரிவித்த ஜெ.பி.நட்டா, ஒற்றைத் தாய் அல்லது கணவனை இழந்த பெண்களுக்கு ஆண்டுக்கு 24 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். 

    கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால், மாதம் 3 ஆயிரம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், இலவச மருத்துவம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ‘விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை’ – தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....