Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுரிஷப் பந்த் விபத்து; விரைவில் பிளாஸ்டிக் சர்ஜரி...

    ரிஷப் பந்த் விபத்து; விரைவில் பிளாஸ்டிக் சர்ஜரி…

    இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. 

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். 25 வயதாகும் ரிஷப் பந்த் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்த போது கடந்த 30-ஆம் தேதி விபத்தில் சிக்கினார். 

    ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்த நிலையில், ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். 

    இந்நிலையில், தற்போது ரிஷப் பந்தின் மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, ரிஷப் பந்திற்கு நெற்றியில் இரண்டு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட உள்ளது. வலது கால் முட்டியில் தசை நார் கிழிந்து இருக்கிறது. வலது கை மணிக்கட்டு, கணுங்கால் பாதம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. மற்றபடி உள்காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிஷப் பந்துக்கு இன்னும் சில ஸ்கேன்கள் செய்ய திட்டமிட்டுள்ளாதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது. 

    இத்துடன், டெல்லி கிரிக்கெட் சங்கம் ரிஷப் பந்தை பார்க்க டேராடூனிற்கு விரைந்தது. சங்கத்தின் இயக்குநர் ஷியாம் சர்மா தெரிவிக்கையில் தேவைப்பட்டால் டெல்லி மருத்துவமனைக்கு ரிஷப் மாற்றப்படுவார் என்று தெரிவித்தார். 

    குஜராத்தில் கோர விபத்து; பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....