Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசஹாலும், குல்தீப் யாதவும் நிகழ்த்திய சுழல்ஜாலம்! - ஐபிஎல் டபுள் தமக்காவில் நடந்தது என்ன?

    சஹாலும், குல்தீப் யாதவும் நிகழ்த்திய சுழல்ஜாலம்! – ஐபிஎல் டபுள் தமக்காவில் நடந்தது என்ன?

    ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் போட்டியில் டபுள் தமக்கா நடைபெற்றது. மதியம் 3:30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டெல்லி அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இரவு 7:30 மணியளவில் தொடங்கிய மற்றொரு போட்டியில் ராராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ அணியும் மோதிக்கொண்டன. 

    முதல் போட்டி 

    முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின், தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களின் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    ஆம்! பிரித்வி ஷா 29 பந்துகளுக்கு 51 ரன்களும், வார்னர் 45 பந்துகளுக்கு 61 ரன்களும் எடுத்து டெல்லி அணிக்கு பலமான அஸ்திவாரத்தை தயார் செய்தனர். இந்த அஸ்திவாரத்தைக்கொண்டு இதற்கு பிறகு வந்த பேட்ஸ்மென்கள் அணியின் ஸ்கோருக்கு சிறிய சிறிய பங்குகளை அளிக்க, இறுதியில் டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

    216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது, கொல்கத்தா அணி. விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் பேட்டிங் புஸ்வானமாகத்தான் இருந்தது. அணியின் கேப்டன், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணாவைத்தவிர எவருமே 25 ரன்களை தாண்டாததால் 171 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, தோல்வியைக் கண்டது. 

    டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அகமத் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவிற்கு வழங்கப்பட்டது.

    இரண்டாம் போட்டி

    டபுள் தமக்காவின் மற்றொரு போட்டியானது இரவு 7:30 மணியளவில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. டாஸ் வென்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆதலால் பேட்டிங்கில் முதலில் களமிறங்கியது, ராஜஸ்தான் ராயல்ஸ்.

    படிக்கல் – 29, ஹெட்மயர் – 59, அஸ்வின் – 28 என ரன்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இருபது ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் தலா 13 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் தந்தனர். 

    166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியானது களமிறங்கியது. லக்னோ அணியானது எளிதாக ஸ்கோரை எட்டிவிடும் என்று பார்த்தால் கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகி அனைவரையும் ஏமாற்றினார். இதன்பிறகு வந்த கௌதமும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். 

    அதன்பின்பு குவின்டன் டி காக் 39, தீபக் ஹூடா 25 ரன்கள், க்ருணால் பாண்டியா 22 ரன்கள், ஸ்டாய்னிஸ் 38 ரன்கள் எடுக்க இறுதி ஓவரில் லக்னோ அணிக்கு வெற்றிப்பெற 15 ரனகள் தேவைப்பட்டது. ஆட்டக்களத்தில் ஆவேஷ் கானும், ஸ்டாய்னிஸூம் இருந்தனர். குல்தீப் சென் பந்துவீச தயாரானார்.

    முதல்பந்தில் ஆவேஷ் கான் ஒரு ரன்கள் எடுக்க அடுத்த மூன்று பந்துகளில் ஸ்டாய்னிஸ் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை. இதனால் ஏறத்தாழ ராஜஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது. இருப்பினும் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரியும், சிக்சரும் அடித்தார், ஸ்டாய்னிஸ். வெறுமனே மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியானது, கொல்கத்தா அணியை வீழ்த்தியது. 

    மேலும், இந்தப்போட்டிதான் குல்தீப் சென் அவர்களுக்கு முதல் ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சஹாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....