Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பதற்றமான சூழலில் உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

    பதற்றமான சூழலில் உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன்!

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு உதவி செய்ய அந்நாட்டுக்குச் சென்று நேற்று பார்வையிட்டுள்ளார்.  

    ரஷ்யா-உக்ரைன் இடையே 47-ஆவது நாளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சிறிய நாடான உக்ரைன் தன்னால் முடிந்தவரை போராடி வருகிறது. உக்ரைன் மக்கள் பலர் அவர்களின் சொந்த நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர், புகுந்தும் வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் போரில் இறந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் பொருள்கள் அதிகளவில் சேதம் அடைந்துள்ளன. ரஷ்யாவை ஐ.நா சபை தற்காலிகமாக கூட்டமைப்பில் இருந்து விலக்கிவைத்துள்ளது. உக்ரைன் அரசும் இதற்கு நன்றி தெரிவித்து வரவேற்றது.

    இதனிடையில் பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போருக்கான ஆயுதங்கள் போன்றவற்றை அளித்து உதவி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அதிபர், போரிஸ் ஜான்சன் உக்ரைன் நாட்டிற்கு சென்று போர் சேதங்கள் குறித்து பார்வையிட்டு அறிந்தார். 

    போர் நடந்துக் கொண்டிருக்கும் பதற்றமான சூழலில், போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்று உக்ரைன் அதிபர் ஜெலின்ஸ்கியுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் உக்ரைனுக்கு உதவும் விதமாக போருக்கு தேவையான 120 கவச வாகனங்கள் மாற்று ஏவுகணைகளை தந்தமைக்கு ஜெலின்ஸ்கி, போரிஸ் ஜான்சனும் நன்றி தெரிவித்தார். அதற்கு போரிஸ் ஜான்சன் மேலும் உக்ரைனுக்கு தேவையான கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிபர்களும் கீவ் நகரின் வீதிகளைச் சுற்றிப் பார்த்தனர். செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்தனர். 

    பதற்றமான சூழலில் போரிஸ் ஜான்சன் உக்ரைனுக்கு வந்து சென்றிருப்பது அனைத்து நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....