Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பொம்மையை வைத்து வித்தைக் காட்டிய திருடன்.. திகைத்த காவல்துறை - வைரலான சம்பவம்!

    பொம்மையை வைத்து வித்தைக் காட்டிய திருடன்.. திகைத்த காவல்துறை – வைரலான சம்பவம்!

    பொதுவாகவே, திருடர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே நடைபெறும் நிகழ்வுகள் பெரும்பாலும் சுவாரஸ்யம் மிக்கவையாகத்தான் இருக்கும். ‘திருடர்களை எப்படி பிடித்தோம்’ என்ற காவல்துறையினரின் பேச்சும், இவ்வளவு நாள், காவல்துறையினரிடம் எப்படி சிக்காமல் நான் வாழ்ந்தேன், வாழ்கிறேன் என்ற திருடனின் பேச்சும் எப்போதுமே நமக்கு ஆவலை தரக்கூடியவையாகத்தான் இருக்கும். 

    கதை, திரைப்படங்கள் என பலவற்றிலும் ‘திருடன்-போலீஸ்’ என்ற கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து பல சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன. அதை நாமும் ஆவலாக கண்டுள்ளோம். நமது தமிழ் திரையுலகத்தை எடுத்துக்கொண்டாலும், பல திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் ‘திருடர்கள் மற்றும் காவல்துறையினருக்கு’ இடையே நடைபெறும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுள்ளன. 

    இப்படியாக சுவாரஸ்யங்களுக்கு பெயர் போன  ‘திருடன்-போலீஸ்’ நிகழ்வுகளில் தற்போது ஒன்று புதியதாக சேர்ந்துள்ளது. ஆம், லண்டனில் உள்ள மான்செஸ்டர் மாகாணத்தில் கடந்த மே மாதம் 18 வயதைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கார் ஒன்றைத் திருடிவிட்டு, பணம் கொடுக்காமல்  பெட்ரோலையும் காரில் நிரப்பியுள்ளார். 

    18 வயதான ஜோஷ்வா என்ற அந்த இளைஞனை தேடி வந்த மான்செஸ்டர் காவல்துறை, கடந்த ஜூலை மாதம் ஜோஷ்வாவின் வீட்டைக் கண்டறிந்தனர். இதன்பின்பு, ஜோஷ்வாவை விசாரிக்க காவல்துறை வீட்டிற்கு சென்றது. அப்போதுதான் அந்த சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியது.

    ஆம், வீட்டிற்குள் சென்ற காவல்துறை அந்த இளைஞனை தேடியுள்ளது. ஆனால், அந்த இளைஞன் அங்கு இல்லை. வீட்டிற்குள்ளாகவே சுற்றிலும் தேடிப்பார்த்த காவல்துறையினர் ஒரு மூலையில் கரடி பொம்மை ஒன்று இருப்பதை கண்டுள்ளனர். அந்த கரடி பொம்மை அசைவது போன்றும், மூச்சு விடுவது போன்றும் இருந்துள்ளது. 

    இதனை கண்ட காவல்துறையினர், அந்த கரடி பொம்மைக்கு அருகில் செல்ல செல்லதான் தெரிந்தது, இவர்கள் தேடிவந்த 18 வயதுள்ள ஜோஸ்வா என்ற இளைஞன் பொம்மைக்குள் மறைந்திருப்பது. கரடி பொம்மைக்குள் இருக்கும் பஞ்சுகளை எடுத்துவிட்டு ஜோஷ்வா அந்த கரடி பொம்மைக்குள் இருந்துள்ளார். இதனை கண்டு திகைத்த காவல்துறையினர் பின்பு ஜோஷ்வாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

    இந்த சம்பவத்தை மான்செஸ்டர் காவல்துறை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த பதிவை இணையத்தில் பலரும் பகிர்ந்து பல்வேறு பின்னூட்டங்களை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....