Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகாட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்

    காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்த அமெரிக்க போர்க்கப்பல்

    காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு வந்து இருக்கும் அமெரிக்க போர்க்கப்பல் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 

    காட்டூர் அருகே இருக்கும் காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்துடன் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்திய கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல் கட்டுப்பட்டு வரும் நிலையில், கப்பல்கள் பழுது பார்க்கும் மையமும் இடம்பெற்றுள்ளது. 

    இந்நிலையில், இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் முகாம் அமெரிக்க கடைப்படைக்கு சொந்தமான ‘சார்லஸ்ட்ரு’ என்ற ராணுவ தளவாட கப்பல் ஒன்று பழுது காரணமாகவும் பராமரிப்பு பணிக்காகவும் இந்தியாவுக்கு முதன் முதலில் வந்தது. இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் அதன் பணிகள் முடிக்கப்பட்டு காட்டுப்பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றது. 

    இந்நிலையில், இந்த மார்ச் 11 ஆம் தேதி காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்திற்கு 2-வது அமெரிக்க ராணுவ போர் கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக வருகை தந்துள்ளது. தொடர்ந்து பழுது நீக்கும் பணியில் துறைமுக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்தப் பணி வருகிற மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, போர்க்கப்பல் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு 2-வது முறையாக அமெரிக்க ராணுவ போர்க்கப்பல் வந்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

    மேலும், 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறாதா மெட்டா?                        

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....