Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சிபாரிசு செய்கிறேன்.. ஆளுநர் பதவி கொடுங்கள் எச்.ராஜாவுக்கு.. சீமான் பேச்சு

    சிபாரிசு செய்கிறேன்.. ஆளுநர் பதவி கொடுங்கள் எச்.ராஜாவுக்கு.. சீமான் பேச்சு

    “தமிழிசைக்கு கொடுத்தது போல் எச்.ராஜாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில், ஆளுநர் பதவி வாங்கி கொடுத்து விடுங்கள்” என சீமான் பேசியுள்ளார். 

    குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நனைந்தபடி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

    மண்ணின் மக்களுக்கான அரசியலைப் பேசுவதால் என்னை இனவெறியர் என்கிறார்கள். அது எனக்கு பெருமைதான். எந்த சாதியினர் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளனரோ அந்தளவுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.100 நாள் வேலைக்கு செல்பவருக்கும் அம்பானிக்கும் ஒரே வரிதான் என்ற நிலை உள்ளது. நாடு முன்னேறுகிறது என மோடி பேசும் பொய்யை விட இவர்கள் பேசும் சமூகநீதி என்பது பெரிய பொய்.

    சீமானிடம் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார் என்று அண்ணாமலை கேட்கிறார். என்னையெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது. அறிவது அறிவு, உணர்வது ஞானம், எல்லா கேள்விக்கு பதில் அளிக்கிறார் என என்னை அண்ணாமலை கிண்டலடிக்கிறார். எனக்கு பேச பதில் இருக்கு பேசுகிறேன், ஆனால் அண்ணாமலைக்கு பேச பதில் இல்லை. மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என கூறும் அண்ணாமலை, 8 ஆண்டாக மோடி என்ன செய்தார் என்பதை சொல்ல வேண்டும்.

    பல புத்தகங்களை எழுதியவர்களெல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், இருபதாயிரம் புத்தகங்களை படித்த அண்ணாமலை அப்படி இருக்க மறுக்கிறார். அவசரப்பட்டு ஐ.பி.எஸ் வேலையை விட்டுட்டு வந்துட்டாரு அண்ணாமலை. இரண்டு வருடத்தில் அண்ணாமலையை விரட்டிவிடுவார்கள். அதற்கு பிறகு என்ன ஆவார் என்பது தெரியவில்லை. இதுபோல இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    தமிழிசைக்கு கொடுத்ததுபோல் எச்.ராஜாவுக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி வாங்கி கொடுத்திடுங்க இல்லையென்றால் பேசி பேசியே ஒருமாதிரி ஆகிடுவார். காரைக்குடியில் ஒரு ஆளுநர் என இட ஒதுக்கீடு வழங்கி எச் ராஜாவிற்கு நான் சிபாரிசு செய்கிறேன்.

    இவ்வாறு அவர், அண்ணாமலை குறித்தும் எச்.ராஜா குறித்தும் பேசினார். 

    இதையும் படிங்க: அரக்க கும்பலின் சித்ரவதை; பிஞ்சு கால்களை வைத்துக் கொண்டு அச்சத்தில் ஓடிய குட்டி யானை..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....