Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மகாலட்சுமியின் கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் ரவீந்தர் ; சீரியல் உலகில் புதிய டும்...

    மகாலட்சுமியின் கரம் பிடித்த பிக் பாஸ் புகழ் ரவீந்தர் ; சீரியல் உலகில் புதிய டும் டும் டும்

    ‘நளனும் நந்தினியும்’, ‘நட்புனா என்னனு தெரியுமா’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ போன்ற பல படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ படத்தில் இவர் வில்லனாகவும் நடித்திருந்தார்.

    தயாரிப்பாளராக இருந்த இவர் யூடியூப் சேனல்களில் பிக்பாஸ் நிகழச்சி குறித்து விமர்சனம் செய்து ,இளைஞர்களிடையே மிகவும் பிரபலமானார். FatMan என்ற பெயரில் இவர் அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    திருமண புகைப்படங்களை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல,  ரவீந்தர் அவருடைய சமூக வலைதள பக்கங்களில், ‘மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா, அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சா… குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

    ‘விடியும்வரை காத்திரு’ என்ற படத்தை ரவீந்தர் தயாரித்துவருகிறார். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான மகாலக்ஷ்மி கணவரைப் பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....