Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆகஸ்டில் கொட்டி தீர்த்த மழை.. 122 ஆண்டுகளில் இது 3-வது முறை!

    ஆகஸ்டில் கொட்டி தீர்த்த மழை.. 122 ஆண்டுகளில் இது 3-வது முறை!

    கடந்த 122 ஆண்டுகளில் 3-வது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாகியுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், கடந்த 122 ஆண்டுகளில் 3-வது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    1906-ம் ஆண்டில் மட்டும் 112 செ.மீ. மழையும், 1909-ம் ஆண்டு 127 செ.மீ. மழையும் இதுவரை பதிவானது. இதைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டிலும் இதுவரை 93 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம், கடந்த 122 ஆண்டுகளில் ஆண்டுகளில் 3-வது முறையாக அதிகப்படியான மழையளவு இந்த ஆண்டும் பதிவாகியுள்ளது. 

    கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவ மழையின் அளவு 40 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் இயல்பான மழைப்பொழிவு 21 செ.மீ. ஆகவும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....