Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வெளிவந்த 'ஜெயிலர்' வீடியோ; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்

    வெளிவந்த ‘ஜெயிலர்’ வீடியோ; உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்

    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. 

    கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம்தான், ஜெயிலர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதைத்தொடர்ந்து வெளிவந்த ஜெயிலர் பட முதல் பார்வை நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ஜெயிலர் திரைப்படத்தில்  நடிக்கும் நடிகர்கள் குறித்த தகவலை ஜெயிலர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இந்தப் படத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது. 

    மேலும், கன்னட உலகின் மிக முக்கிய நடிகர் சிவ ராஜ்குமார் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

     இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகவும் குஷியாகவுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தோன்றும் விதம் மாஸாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

    ராகுல் காந்தியுடன் ஒற்றுமை பயணத்தில் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....