Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதேர்வுக்குழுவை நீக்கியதா இந்திய கிரிக்கெட் வாரியம்? - வெளிவந்த அறிவிப்பு

    தேர்வுக்குழுவை நீக்கியதா இந்திய கிரிக்கெட் வாரியம்? – வெளிவந்த அறிவிப்பு

    இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. 

    சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடப்பாண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இத்தொடரில், இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

    முன்னதாக நடைபெற்ற ஆசியக் கோப்பை, தற்போது இருபது ஓவர் உலகக் கோப்பை என இரு முக்கிய தொடர்களில் இந்திய அணி பெரியதாக சோபிக்காமல் போனது ரசிகர்களையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் (பிசிசிஐ) ஏமாற்றமடைய செய்துள்ளது. 

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தேர்வுக்குழுவை நியமிப்பதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதனால் தற்போது தேர்வுக்குழுத் தலைவராக உள்ள சேதன் சர்மா மற்றும் அவருடைய குழுவினர் நீக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

    தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கென சில தகுதிகள் உள்ளன. அவற்றின்படி, விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 7 டெஸ்டுகள் அல்லது 30 முதல்தர ஆட்டங்கள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல்தர ஆட்டங்களில் விளையாடியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

    மேலும், இப்பணி சார்ந்த விண்ணப்பங்கள் வருகிற நவம்பர் 28-க்குள் அனுப்பப்பட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 

    பலரின் வாழ்வை மாற்றிய, இயற்கையை நேசியுங்கள் என்று போதித்த சின்னக் கலைவாணர் விவேக்; பிறந்தநாள் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....