Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅனைத்து மாநில தலைநகரங்களையும் இணைக்கும் புதிய திட்டம் - இந்திய ரயில்வே அமைச்சகம்

    அனைத்து மாநில தலைநகரங்களையும் இணைக்கும் புதிய திட்டம் – இந்திய ரயில்வே அமைச்சகம்

    வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் ரயில்வே அமைப்பை வலுப்படுத்தும் வகையில் அருணாசலப் பிரதேசத்திலும் அனைத்து மாநில தலைநகரங்களையும் இணைக்கவும் ரயில் பாதைகளை அமைக்க இந்திய ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது.

    இந்த விரிவாக்க திட்டங்களின் கீழ் அருணாச்சல பிரதேசத்தில் புதிய ரயில்வே திட்டங்களுக்கான இறுதிக்கட்ட ஆய்வு பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சப்யசாச்சி டே  இந்த ஏற்பாடுகள் குறித்து தகவல் கூறியுள்ளார்.

    அண்டை நாடான பூட்டானுக்கு ரயில் பாதைகளை கொண்டு செல்வது தங்களின் திட்டம் என்றும், ரயில்வே மூலம் பூட்டானை இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலம் அருணாச்சல பிரதேசம் உட்பட வட கிழக்கு பிராந்தியத்தில் மேலும் சில புதிய ரயில்வே திட்டங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், சீன எல்லையை ஒட்டிய பாலுக்போங்கில் இருந்து தபாங் மற்றும் சில பத்தர் ஆன புதிய ரயில் பாதையில், சீன எல்லையில் அமைக்கவும் முர்கோங்செலக்கில் இருந்து பாசிக்காட் ரயில் பாதையை நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சீனாவுடனான எல்லை பிரச்சனையை கருத்தில் கொண்டு இந்த ரயில் பாதை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எண்ணப்படுகிறது.

    இதையும் படிங்க2023-ஆம் ஆண்டு அண்ணா பதக்கத்துக்கு வீர தீர செயல் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....