Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா100-வது நாளை எட்டவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்!

    100-வது நாளை எட்டவுள்ள ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்!

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100-வது நாளை எட்டவுள்ளது.

    ராகுல் காந்தி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து கடந்த செப்டம்பர் 07 -ஆம் தேதி தொடங்கினார்.இந்த பயணத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் தொடங்கிய இந்த ஒற்றுமை நடைபயணமானது கேரளா, கர்நாடகா ,ஆந்திரா,தெலுங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், என தொடர்ந்து 99-வைத்து நாளாக இன்று ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி நடைபெற்றுவரும் ராகுல் காந்தியின் இந்த ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாளை 100-வது நாளை எட்டவுள்ளது.இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ,அதன் தலைநகர் ஜெய்ப்பூரில் மிரம்மாண்ட நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் காங்கிரஸ் கட்சி சார்பில் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த தேசிய அளவிலான தலைவர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்லாது, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்,ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் பொதுமக்கள் ஏரளாமானோர் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு பெண்கள், குழந்தைகள் வரை தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

    இதனால் ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்திற்கான பலன் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர்.

    4 வயது பெண் குழந்தையை வைத்து ஓடும் பேருந்தில் நகை, பணம் திருட்டு! சிசிடிவி காட்சிகளை கொண்டு துப்பு துலக்கும் காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....