Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது.. ஆஸ்திரேலியாவிற்கு பறந்த ராணி எலிசபெத்தின் ரகசிய கடிதம்

    63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது.. ஆஸ்திரேலியாவிற்கு பறந்த ராணி எலிசபெத்தின் ரகசிய கடிதம்

    சூரியனே மறையாத நாடு என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட நாடு என்றால் அது இங்கிலாந்து தான். ஒரு காலத்தில் இங்கிலாந்து பேரரசின் கட்டுப்பாட்டில், இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இருந்தது. அதில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. தற்போதுவரை ஆஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்படும் அணைத்து சட்டங்களும் இங்கிலாந்து ராணியின் பெயரால் மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து,  அனைத்து நாடுகளும் அவருக்காக துக்கம் அனுசரித்து வருகிறது .

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு, மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கைப்பட கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் இந்த கடிதமானது “ஆஸ்திரேலியா மக்களின் நலனுக்கானது” என்று குறிப்பிட்டு எழுதி, அக்கடிதத்தை அந்த நாட்டின் மேயருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

    மேலும் அதில் 2085 ஆம் ஆண்டு மேயராக தேர்வு செய்யப்படும் ஒரு தலைவனின் கைகளால் மட்டும்தான் இந்த கடிதமானது திறக்கப்பட வேண்டும் என்பது மறைந்த ராணி எலிசபெத்தின் வேண்டுகோளாகும். தற்போது அந்த கடிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கடிதத்தில் உள்ள தகவல்களை அறிந்துகொள்ள ஆஸ்திரேலியா மக்கள் ஆவலாக உள்ளனர். இக்கடிதம் 1986 ஆம் ஆண்டே ராணி எலிசபெத்தால் எழுதி அனுப்பட்டது குறிப்பிடத்தக்கது .

    மேலும் தற்போது இங்கிலாந்து அரசராக பொறுப்பேற்றுள்ள 3-ஆம் சார்லஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவில் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....