Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு; முடிவுக்கு வந்த உலகின் நீண்ட கால ஆட்சி

    பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு; முடிவுக்கு வந்த உலகின் நீண்ட கால ஆட்சி

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசபெத் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பங்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

    பிரிட்டனின் அரசி என்றாலே பலருக்கும் முதலில் நியாபகம் வருவது இரண்டாம் எலிசபெத் அவர்கள்தான். தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவைத் தொடர்ந்து, 1952-இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டு வந்தார்.

    அதன்பின்னர், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவர் தங்கியிருந்தார். அரசியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தார். இந்நிலையில், 96 வயதான இரண்டாம் எலிசபெத்திற்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. 

    மேலும், ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த அரசி எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதன்பின்னர், அவரது உடல்நிலை குறித்து அறிந்து, அரசியின் மகனும் பட்டத்து இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோர் பால்மரால் விரைந்தனர்.

    இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோர் கூடினர்.

    எலிசபெத்தின் உடல் வெள்ளிக்கிழமை லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 

    பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, எலிசபெத்தின் கணவர் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி தனது 99-ஆவது வயதில் காலமானது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....