Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்குவது தண்டனைக்குரியது; தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் கடும் எச்சரிக்கை

    கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்குவது தண்டனைக்குரியது; தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் கடும் எச்சரிக்கை

    ஸ்ரீபெரும்புதூரில் சுத்திகரிப்பு பணியின் போது விஷவாயு தாக்கி பலியான 3 நபர்களின் குடும்பத்துக்கு தலா 21 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு உணவகத்தில் கழிவுநீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகிய 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். 

    இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தை தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் இன்று நேரில் பார்வையிட்டார். 

    அப்போது அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது:

    கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வது எந்திரமயமாக்கப்பட்டு மனிதர்களை பயன்படுத்துவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம். இந்த சம்பவத்தில் பலியான 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.21 லட்சம் வழங்கப்படும். இதில் சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகம் தலா ரூ.15 லட்சம், தமிழக அரசு தலா ரூ.6 லட்சம் வழங்கும். 

    இதுதவிர இவர்களது குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கருணை தொகை, வீட்டுமனை பட்டா, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. 

    இந்த உணவகத்தின் உரிமையாளரை அடுத்த 72 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்கநெருக்கடியில் எலான் மஸ்க்! ட்விட்டரை வாங்க நாளை ஒருநாள் தான் காலக்கெடு… பின்னணி என்ன ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....