Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஜெயலலிதா இதனால் தான் இறந்தாரா? பரபரப்பு பேட்டியளித்த புகழேந்தி!

    ஜெயலலிதா இதனால் தான் இறந்தாரா? பரபரப்பு பேட்டியளித்த புகழேந்தி!

    தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வரும் நிலையில், வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை அளிக்காததால் தான் ஜெயலலிதா இறந்தார் என்று பரபரப்பான பேட்டியை அளித்துள்ளார் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி.

    முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, விசாரணைக்கு அழைக்க வேண்டும் என முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மனுத் தாக்கல் அளித்திருந்தார்.

    இதன் மீது விசாரணை எடுக்கப்பட்டு, நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார், புகழேந்தி. ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்தவுடன் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணையை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்ட மனுவின் அடிப்படையில், ஆறுமுக சாமி ஆணையத்தில் எனது வாக்கு மூலத்தை அளித்துள்ளேன் என்றார் புகழேந்தி.

    ஜெயலலிதா மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இரு அணிகளாக பிரிந்தனர். சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த இவர்கள், ஏதாவது செய்து தப்பித்து விட வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார்கள்.

    ஓ. பன்னீர்செல்வம் 8 முறை சம்மன் அனுப்பிய பிறகே, ஆஜராகினார். விசாரணையில் எனக்கு எதுவும் தெரியாது என்று தான் கூறினார். ஆனால், ஜெயலலிதாவை உயர் சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டிச் செல்ல வேண்டும் என கூறியதாகவும், அதற்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறினார்.

    வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை. தங்களுக்கு என்ன என்று அனைவரும் இருந்து விட்டார்கள். ஆகையால் தான், ஜெயலலிதாவை யாரும் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லவில்லை. வெளி நாடு சென்று சிகிச்சை அளித்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்காததால் ஜெயலலிதா இறந்து விட்டார். டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதா இறந்து விட்டார் என்று நான் நினைக்கிறேன். அதற்கு அடுத்த நாளான, 5 ஆம் தேதி தான் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை அறிவித்தார்கள் என்று புகழேந்தி கூறினார்.

    அப்போதைய அதிமுக தலைமை நிலைய செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் கைரேகை வைக்கவோ, கையெழுத்திடவோ முடியாது என்று நினைக்கிறேன். அப்படி இருக்கையில், காவேரி நதிநீர் தொடர்பான கூட்டம் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்படி தெரியும் என்று சந்தேகமாக உள்ளது. எனவே தான், அவரை கட்டாயம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். விசாரணை முடிந்த பிறகு, ஆணையம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம் என புகழேந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள், தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் நடந்த விபரீத சம்பவம்; 11 பேர் பலி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....