Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! - புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    கோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! – புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் யார் முன்னேற்றம் அடையப் போகிறோம் என்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் போட்டியிட்டுக் கொண்டன.

    இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆதலால், ராஜஸ்தான் அணியானது முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

    பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பி ராஜஸ்தான் அணிக்கு அதிர்ச்சி தந்தார். இதன்பிறகு களமிறங்கிய படிக்கல், அஸ்வின் போன்றோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

    இதனால் ராஜஸ்தான் அணி ரன்களை கூட்ட திணறியது. ஆனால் ரியான் பராக்கின் ஆறுதல் ஆட்டத்தால், ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் சற்றே உயர்ந்தது. 31 பந்துகளில் ரியான் பராக் 56 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்த படியாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்களை எடுத்தார்.

    இருபது ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணியானது, 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது.

    145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது, பெங்களூர் அணி. ஆனால் பெங்களூர் அணியின் ஆட்டமோ எளிய இலக்கையும் அடைவதாய் இல்லை.

    ஆம்! இம்முறை விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க, பேட்டிங்கில் அவர் மீள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார், அவர்!

    ஒட்டுமொத்த பெங்களூர் அணியின் பேட்டிங்கில், பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் தான் அதிகப்படியான ரன்களை அடித்திருந்தார். அவர் அடித்த ரன் 23 ஆகும்.

    19.3 ஓவர்களிலேயே பெங்களூர் அணியானது தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோற்கடித்தது.

    ஆட்டநாயகன் விருது ரியான் பராக்கிற்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

    இதையும் படியுங்கள், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்; எத்தனை பில்லியன் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....