Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் நடந்த விபரீத சம்பவம்; 11 பேர் பலி!

    தஞ்சாவூர் தேர்த் திருவிழாவில் நடந்த விபரீத சம்பவம்; 11 பேர் பலி!

    தஞ்சாவூரில் தேர்த் திருவிழாவில், உயர் மின் அழுத்த கம்பியின் மீது தேர் உரசியதால், ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். 

    தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு பகுதியில், அப்பர் குருபூஜை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, நடைபெறும் மிகப் பெரிய திருவிழாவாகும். 94 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அப்போது தேரினை அப்பகுதி மக்கள், வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்படி வரும்போது எதிர்ப்பாராத விதமாக உயர் மின் அழுத்த கம்பியின் மீது, தேரின் உச்சி மோதி உடனே தேரில் தீ பற்றி எரிந்திருக்கிறது. 

    இதனால், தேரில் இருந்தவர்களுக்கும் தேரின் அருகில் இருந்தவர்களுக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் மூன்று சிறுவர்கள், உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்னனர். 10 க்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

    விபத்து நடந்த இடத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் பலர், தேரினை விட்டு தூரத்தில் இருந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில், இருந்த பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். கோவில் திருவிழாவில் இப்படி துயரமான சம்பவம் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த விபத்துக்கு முக்கிய காரணம், என்னெவென்று விசாரித்த காவல் துறையினருக்கு, சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை, பழைய சாலையை நீக்கிவிட்டு போடாமல், அதன் மீதே மீண்டும்  போடப்பட்டதினால் சாலை ஒன்றரை அடி உயர்ந்துள்ளது. இதனால் தான், இப்பகுதியில் விபத்து ஏற்பட்டதாகவும், மேலும் சாலை ஓரங்களில் சில பள்ளங்கள் இருப்பதால், தேர் இழுக்கும் போது நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் விபத்து நடந்ததற்கான காரணங்கள் குறித்து தஞ்சாவூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படியுங்கள், பண மோசடி வழக்கில் பிரபல நடிகர் மீது குவியும் வழக்குகள்; கைதான தயாரிப்பாளர்! – என்ன நடக்கிறது?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....