Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

    புதுச்சேரியில் பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

    புதுச்சேரி மாநில பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரியில் கல்வியாண்டு முடிகின்ற சூழ்நிலையில் கூட சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை முடிக்காத அரசை கண்டித்தும், மாணவர்களுக்கான ஒரு ரூபாய் பேருந்தை இயக்காத ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், சென்டாக் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரியும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 10 சதவீத இடதுக்கீட்டை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் புதுச்சேரி மாநில பள்ளி கல்லூரி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....