Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கம்; இடம்பெற்ற பத்து பொருட்கள்!

    பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கம்; இடம்பெற்ற பத்து பொருட்கள்!

    புதுவையில் இலவச பொங்கல் தொகுப்புக்காக 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய் சரவணன்குமார் தெரிவித்துள்ளார். 

    பொங்கல் பண்டிகை நெருங்குவதால் அரசுத் தரப்பில் இருந்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும் இலவச பொங்கல் தொகுப்பு குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது. 

    இந்நிலையில், புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து, புதுச்சேரி அரசு குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தெரிவித்ததாவது: 

    முதலமைச்சர் உத்தரவின் பேரில் குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் பொங்கல் பண்டிகையொட்டி ரூ.500 மதிப்புள்ள பொங்கல் பொருள் தொகுப்பு பொதுமக்கள் வழங்கப்படும். 

    பச்சரிசி, வெல்லம், மஞ்சள், கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பருப்பு, உளுந்து, முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகிய 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பானது புதுவையில் உள்ள 3.5 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கப்படும்.  இதற்காக ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியில் முழு கடையடைப்பு; போராட்டத்தை முன்னெடுக்கும் அதிமுக..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....