Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிபுதுச்சேரி கூட்டுறவு நூற்பாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்...திமுக எதிர்கட்சி வலியுறுத்தல்

    புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலையை அரசே ஏற்று நடத்த வேண்டும்…திமுக எதிர்கட்சி வலியுறுத்தல்

    புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலையை அரசே ஏற்று முழுமையாக இயக்க வேண்டும் என திமுக எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் ஊழியர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலையான ஸ்பின்கோ தொழிலாளர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக மாநில கழக அமைப்பாளருமான இரா.சிவா தலைமையில் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    புதுச்சேரி திருபுவனை கிராமத்தில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை மிகவும் நல்ல நிலையில் இயங்கி வந்தது. ஆனால், தற்போது பஞ்சு விலை உயர்ந்து விட்டதாக கூறி கடந்த நான்கு மாதங்களாக லே ஆப் கொடுத்து ஆலையை மூடிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தாங்கள் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது மிகவும் சிறப்பாக நல்ல நிலையில் இந்த நூற்பாலையை நடத்தினீர்கள்.

    தற்போது இந்த ஆட்சியில் இந்த நூற்பாலையை இயக்காமல் நிறுத்தி விட்டதால் 400 மேற்பட்ட குடும்பத்தினர் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் வறுமையில் வாடுகிறார்கள். எனவே, தாங்கள் மீண்டும் இந்த ஆலையை இயங்கச் செய்து, வேலையை இழந்து வாடும் ஊழியர்களுக்கு பணி வழங்கிட வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் அரசே ஏற்று கூட்டுறவு நூற்பாலையை முழுமையாக இயக்க வேண்டும். நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை வழங்க வேண்டும். ஆட்கள் பற்றாகுறையை நீக்க புதிய ஆட்களை நியமிக்க வேண்டும். ஆலையில் உள்ள நூல் பண்டல்கள் ருபாய் 1,50,000,00/- (ஒன்றரை கோடி) மதிப்புள்ள நூல்களை விற்பனை செய்ய வேண்டும். ஆலையில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க தொழிலாளர்கள் புதிய வேலை பளுவை ஏற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளனர். எனவே ஆலையை புனரமைப்பிற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.

    மேலாண் இயக்குநர் மற்றும் நிர்வாக மேலாளர்களை முழு நேரமாக ஆலையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் உள்ள தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு அரசாங்க அனுமதி கொடுக்க வேண்டும். ஆலையில் உள்ள உணவு விடுதியை திறந்து தொழிலாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றி ஆலையை திறந்து இயக்க உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இச்சந்திப்பின்போது எம்.எல்.ஏ., செந்தில்குமார், தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், ஸ்பின்கோ நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, ரமேஷ், ராஜாராம், வெங்கடகிருஷ்ணன், செல்வம், ராஜசேகர், ஆறுமுகம், நாகராஜ், ராமமூர்த்தி, சுப்புராயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இதையும் படிங்க:தொடங்கியது இரு மாநில எல்லையில் டிஜிட்டல் நில அளவை பணிகள்: விளக்கமளித்த வருவாய் துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....