Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசு அலுவலங்களில் வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்...

    அரசு அலுவலங்களில் வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்…

    புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சட்டப்படியான வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையை கண்டித்து சமூக ஜனநாயக இயக்கத்தினர் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சட்டப்படியான வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்க தவறிய பணியாளர் நிர்வாக சீர்த்திருத்த நிர்வாக துறையை கண்டித்து சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் உள்பட பல்வேறு சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    அரசு ஊழியர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை தலைமை செயலாளர் உறுதி செய்யவில்லை என்றால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    டெலிவரி சேவைகளை வழங்கும் டன்சோ நிறுவனம் காட்டும் கெடுபிடி: வாகன ஊழியர்கள் போராட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....