Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகடைசி இருபது ஓவர்: வெற்றி பெறுமா இந்திய அணி?

    கடைசி இருபது ஓவர்: வெற்றி பெறுமா இந்திய அணி?

    இந்தியாவுக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துள்ளது.

    இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றில் முதலாவது இருபது ஓவர் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. 

    இந்நிலையில், இன்று மூன்றாவது இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியானது, ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்க தீர்மானம் செய்துள்ளது. 

    இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஜெயிக்கும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும், தோறகும் பட்சத்தில் இருபது ஓவர் தொடர் சமனில் முடிந்துவிடும்.

    கால்பந்து உலகக் கோப்பை; வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து…டிரா செய்த வேல்ஸ்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....