Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து...டிரா செய்த வேல்ஸ்

    கால்பந்து உலகக் கோப்பை; வெற்றி வாகை சூடிய நெதர்லாந்து…டிரா செய்த வேல்ஸ்

    கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றில் நெதர்லாந்து, அமெரிக்க அணிகள் வெற்றி வாகை சூடியது. 

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் (21-11-2022) நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் செனகல், நெதர்லாந்து அணிகள் மோதின. குரூப் பி பரிவுக்கான லீக் ஆட்டத்தில்  அமெரிக்கா, வேல்ஸ் அணிகள் மோதின.

    செனகல்-நெதர்லாந்து

    இந்த ஆட்டத்தின் 84 வது நிமிடத்தில் கோடி கேக்போ ஒரு கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, 99வது நிமிடத்தில் நெதர்லாந்தின் டேவி கிளாசன் ஒரு கோல் அடித்தார். 

    இதன்மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தியது.

    அமெரிக்கா-வேல்ஸ்

    இந்த ஆட்டத்தில் முதல் பாதியின் 36-வது நிமிடத்தில் அமெரிக்க அணியின் திமுதி வியா ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அமெரிக்கா 1-0 என முன்னிலை வகித்தது. 

    சரிக்கு சமமாக விளையாடிய வேல்ஸ் அணி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 82-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது. ஆம், பெனால்டியை பயன்படுத்தி வேல்ஸ் வீரர் பாலே கோலாக மாற்றினார். 

    இதனால், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

    ‘இருக்கு.. ஆனா இல்ல’ ; ட்விட்டரில் நிறுத்திவைக்கப்பட்ட ‘ப்ளூ டிக்’ ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....