Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த மீதான விசாரணைக்கு தடை - நீதிமன்றம் அதிரடி..

    தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த மீதான விசாரணைக்கு தடை – நீதிமன்றம் அதிரடி..

    வேலையில்லா பட்டதாரி படம் தொடர்பான வழக்கில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் மீதான விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படம், வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமத்திருந்தார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. 

    இப்படத்தில் நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் இடம்பெறாததால், அப்படத்தை தயாரித்த வுண்டர்பார் நிறுவனம், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

    அதன்பேரில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உயர்நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டிருந்தது. அதே நேரம், இந்த புகார் மீதான விசாரணையை ரத்து செய்யக்கோரி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. 

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவர் மீதும் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    வெளியானது, பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....