Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சி! திறந்து வைத்து பார்வையிட்ட ஸ்டாலின்

    பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சி! திறந்து வைத்து பார்வையிட்ட ஸ்டாலின்

    சென்னை, அண்ணா அறிவாலயத்தில், இன்று (17.12.2022) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனமானப் பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மூன்று நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

    பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில், இனமானப் பேராசிரியர் பெருந்தகையின் இளமைக்கால புகைப்படங்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடனான புகைப்படங்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனான புகைப்படங்கள், பேராசிரியர் அவர்கள் அமைச்சராக பதவியேற்ற நிகழ்வுகள், பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் இனமான பேராசிரியர் அவர்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர் அவர்களின் மகன் அ. அன்புச்செல்வன், பேரனும் சட்டமன்ற உறுப்பினருமான அ. வெற்றியழகன், புகைப்படக் கண்காட்சி ஏற்பாட்டாளர் கோவை சுப்பு மற்றும் பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ‘திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம்’ – வலியுறுத்திய திருநங்கை நீதிபதி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....