Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி லீக்: இறுதிக்கட்டத்துக்கு முன்னேறிய அணிகள்..ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்..

    புரோ கபடி லீக்: இறுதிக்கட்டத்துக்கு முன்னேறிய அணிகள்..ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்..

    புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு புனேரி பல்தான் மற்றும்  ஜெய்ப்பூர் அணிகள் தகுதிப் பெற்றுள்ளது. 

    புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளும், புனேரி பல்தான் மற்றும் தமிழ்த் தலைவாஸ் அணிகளும் ஆட்டம் கண்டன. 

    இவற்றின் முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸும் – பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. ஆரம்பம் முதலே இந்த ஆட்டமானது ஜெய்ப்பூர் பக்கம் இருந்தது. அந்த அணி வீரர்கள் அதிரடியாக ஆட, இறுதியில் ஜெய்ப்பூர் அணி 49-29 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

    மேலும், புனேரி பல்தான் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதிய இரண்டாம் அரையிறுதியானது விறுவிறுப்பாக சென்றது. இரு அணி வீரர்களும் தங்கள் திறமையை வெளிப்படுத்த, முடிவில்  39-37 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்த் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்தான்  இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

    வருகிற சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர்-புனே அணிகள் மோதுகின்றன.

    ஒரே கதை ஆனாலும் வெற்றிப்பெற்ற அவதார்; ஒரு கடந்த கால பயணம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....