Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்கொழுந்து விட்டு எரிந்த தனியார் பேருந்து! ஜன்னல் வழியே உயிர் தப்பிய பயணிகள்! திக் திக்...

    கொழுந்து விட்டு எரிந்த தனியார் பேருந்து! ஜன்னல் வழியே உயிர் தப்பிய பயணிகள்! திக் திக் நிமிடங்கள்

    வந்தவாசி அருகே தனியார் பஸ் ஒன்று திடிரென்று பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ,பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டதும் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறியபடி ஜன்னல் கண்ணாடியை உடைத்து உயிர்த்தப்பினர்.இச்சமபவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு விட்டு தனியார் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்துள்ளது . அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீரம்பாக்கம் அருகே உள்ள கூட்டு சாலையில் வந்த போது அங்கிருந்த பாலத்தின் மீது திடீரென பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது . இதனால் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று திடீரென தீ பற்றி பேருந்து முழுவதும் பரவியுள்ளது.

    இதனை கண்ட பயணிகள் அலறியபடி முன் பக்கத்திலும் ஜன்னல் கண்ணாடியை உடைத்தும் உயிர்த்தப்பியுள்ளனர் .இதற்கிடையில் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு விபத்துச்சம்பவம் தொடர்பாக தகவல் கொடுக்கவே அவர்களும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் ஒரு மணிநேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    இந்த விபத்துச்சம்பவத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர்.அவர்கள் மீட்கப்பட்டு அம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது. மேலும் தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    லட்சுமி யானையின் கற்சிலை அகற்றம்., பொதுமக்கள் மீது தடியடி., காவல்துறையின் அத்துமீறலால் பரபரப்பான புதுச்சேரி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....