Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ரஜினிகாந்த் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வாழ்த்து

    ரஜினிகாந்த் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் வாழ்த்து

    நடிகர் ரஜினிகாந்திற்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். 

    எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்தில், ‘அன்பு சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடும் நல் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இன்று 73-ஆவது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வெறுமனே வெற்றிகளால் நிறைந்தவர் இல்ல, ரஜினிகாந்த்… – பர்த்டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....