Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜீ20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்

    ஜீ20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்

    ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு செல்ல இருக்கிறார். 

    இந்தோனேசியாவின் பாலி தீவில் நவம்பர் 15,16 ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். 

    உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, எண்மரீதியிலான மாற்றம், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதற்காக அவர் இன்று மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா பாலிக்கு செல்ல உள்ளார். 

    அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் இதானுவேல் மேக்ரான் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 

    இதன்காரணமாக பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவராத்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    உலகின் மிக முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பில் அர்ஜெர்டினா, ஆஸ்திரேலியா, பிரேஸில் கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இடம் பெற்றிருக்கின்றன.

    இதையும் படிங்கஇந்தியர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொன்ன ஹேப்பி நியூஸ்! பெரும் இழப்பால் கடுப்பில் சீனா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....