Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து - துவம்சம் செய்த ஸ்டோக்ஸ்!

    பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து – துவம்சம் செய்த ஸ்டோக்ஸ்!

    இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வெற்றி வாகை சூடியது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், பாகிஸ்தான் அணிகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

    இதை்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் களம்கண்டது. அந்த அணி சார்பில் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசா ம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பெரிதும் எதிர்பாரக்கப்பட்ட முகமது ரிஸ்வான் 15 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இவரைத் தொடர்ந்து, 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாபர் ஆசாம் விக்கெட்டை இங்கிலாந்து கைப்பற்றியது. அதன்பின்னர், களமிறங்கிய முகமது ஹாரிஸ் 8 ரன்களில் வெளியேறினார். ஷான் மசூத் 38 ரன்கள், இஃப்திகர் அகமது டக் அவுட், ஷாதாப் கான் 20 ரன்கள், முகமது நவாஸ் 5, முகமது வாஸிம் 4 ரன்கள் எடுத்தனர். மொத்தத்தில் பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 

    இங்கிலாந்து அணி சார்பில், அலெக்ஸ் ஹேல்ஸ் 1 ரன்னிலும், ஃபில் சால்ட் 10 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை இழக்க, தடுமாற்றம் உருவானது. இதன் பிறகு, கேப்டன் ஜோஸ் பட்லருடன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். பட்லர் 26 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஹாரி புருக் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இச்சமயத்தில் இங்கிலாந்து அணி இருக்க, மொயீன் அலி, ஸ்டோக்ஸுடன் இணைய 19 ரன்களுக்கு மொயின் அலி பெவிலியன் திரும்பினார். ஸ்டோக்ஸ் 52 ரன்களுடனும், லியம் லிவிங்ஸ்ட ன் 1 ரன்னுடன் களத்திலிருந்து இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தனர். இங்கிலாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்களை எட்டி வென்றது.

    இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், fஇரு முறை இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்ற 2-ஆவது அணி என்ற பெருமையையும் இங்கிலாந்து பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் சொன்ன ஹேப்பி நியூஸ்! பெரும் இழப்பால் கடுப்பில் சீனா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....