Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'என் மனைவிக்கு ஆதரவு அளியுங்கள்' - தேர்தல் பிரசாரத்தில் ரவீந்திர ஜடேஜா

    ‘என் மனைவிக்கு ஆதரவு அளியுங்கள்’ – தேர்தல் பிரசாரத்தில் ரவீந்திர ஜடேஜா

    தனது மனைவி தேர்தலில் போட்டியிடுவதையொட்டி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா ஆதரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மோடியும் குஜராத் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார். மறுமுனையில் காங்கிரஸ் கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சிகளும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    சமீபத்தில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டப் பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

    குஜராத் கட்லோடியா தொகுதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் போட்டியிடுகின்றனர். மேலும், வெளிவந்துள்ள பட்டியலின்படி, பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. 

    இந்நிலையில், இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘ இதோ, குஜராத் தேர்தல் வந்துவிட்டது. இது இருபது ஓவர் போட்டி போல் உள்ளது. இந்த தேர்தலில் என் மனைவி பாஜக வேட்பாளராக அரசியலில் அறிமுகமாகிறார்.

    மேலும், நாளை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜாம்நகர் மக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிக்க திரளாக வருமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்கபாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து – துவம்சம் செய்த ஸ்டோக்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....