Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய அரசியலமைப்பைக் காப்பாரா புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு?

    இந்திய அரசியலமைப்பைக் காப்பாரா புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு?

    இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியது.

    இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். 

    இந்நிலையில், நேற்று (ஜூலை 21) காலை 11 மணி அளவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது.

    இதில், 4701 வாக்குகளானது ஏற்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், குடியரசுத் தலைவர் பதவிக்கு தேவையான 50 சதவீதத்துக்கும் தேவையான வாக்குகளை பெற்று திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார்.

    இந்த தேர்தலின் இறுதி முடிவின்போது திரௌபதி முர்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகளும்,  யஷ்வந்த் சின்ஹா 3,80,177 (36%) வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.   

    நாடு முழுவதும் பதிவான எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்களின் வாக்குகளில் திரௌபதி முர்மு 2,824  எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 540 எம்.பி-க்களின் வாக்குகளையும் பெற்றார். அதேபோல், யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 208 எம்.பி.க்களின் வாக்குகளையும் பெற்றார். 

    இதில், 38 எம்எல்ஏ-க்கள் மற்றும் 15  எம்.பி-க்கள் உள்பட மொத்தம் 53 பேரின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

    குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க உள்ள திரௌபதி முர்மு, ஒடிஷா மாநிலம் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள, உபர்பேடா கிராமத்தில் பிராஞ்சி நாராயண் துடு என்பவருக்கு 1958-ம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி மகளாக பிறந்தார்.

    இவர் இந்திய சுதந்திர போராட்டங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்களில் மிக முக்கியமானவர்களுமான சந்தால் பழகுடியினத்தைச் சேர்த்தவர்.

    திரௌபதி முர்மு பள்ளி ஆசிரியையாக தன்னுடைய ஆரம்ப கால பயணத்தை தொடங்கினார். ஸ்ரீ அரபிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும், ஒடிஷா அரசின் நீர்பாசனத் துறையின் இளநிலை உதவியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். 

    திரௌபதி முர்முவின் தந்தை மற்றும் தாத்தா இருவருமே ஊர் தலைவர்களாக இருந்து வந்தவர்கள். இவர்களைப் பின்பற்றி திரௌபதி முர்முவும் 1997-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, ரைரங்பூர் நகர் பஞ்சாயத்து கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2000-ம் ஆண்டு ரைரங்பூர் நகர் பஞ்சாயத்தின் சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன் பின்பு அதே தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு, 2000 முதல் 2002-ம் ஆண்டு வரை வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான அமைச்சராகவும் 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை மீன்வளங்கள் மற்றும் விலங்கு வளங்களுக்கான அமைச்சராகவும்  பணியாற்றி இருக்கிறார். அந்த காலகட்டத்தில் ஒடிஷா அரசால் கொடுக்கப்படும் நீலகந்தா எனப்படும் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் வென்றுள்ளார். 

    அதன்பின்பு, 2015-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஒடிசாவில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பழங்குடியின பெண்மணி திரௌபதி முர்முவே ஆவார். 

    இந்தியாவின் 15வது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்கவுள்ள திரௌபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....