Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்போலந்து நாட்டின் மீது விழுந்த ஏவுகணை ரஷ்ய படை வீசியது இல்லை... முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த...

    போலந்து நாட்டின் மீது விழுந்த ஏவுகணை ரஷ்ய படை வீசியது இல்லை… முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

    போலந்து நாட்டின் மீது விழுந்த ஏவுகணை ரஷ்ய படை வீசியது இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    உக்ரைன்-ரஷ்யா இடையே கடந்த 9 மாதங்களாக கடும் போர் நிலவி வருகிறது. இதனால் உலகில் விலைவாசி உயர்வு அதிகமானது. உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடி ஏறினர். மேலும் பல உயிர்கள் பரிதாபமாக பறிபோயின. அதே சமயம் உக்ரைன் நேட்டோ அமைப்புடன் இணையவில்லை என்றாலும், அதற்கான உதவிகள் செய்யப்பட்டு வந்தது. 

    இதனிடையே உக்ரைன் போலந்து எல்லையில் நேற்று இரவு நடைபெற்ற போரில், ரஷ்யா நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் போலந்து நாட்டிற்குள் விழுந்ததாகவும், அதனால் இரண்டு போலந்து நாட்டினர் இரண்டு பேர் உயிரிழந்தாகவும் தற்போது ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

    இதனை ரஷ்யா மறுத்துள்ள நிலையில், போலந்து அதிபருடன் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், அனைத்து உதவிகளும் நேட்டோ தரப்பில் வழங்கப்படும் என கூறி, நேட்டோ கூட்டத்திலும் ஆலோசனை செய்தார். 

    இந்நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதில், போலந்து நாட்டில் விழுந்த ஏவுகணைகள், ரஷ்யா போலந்து எல்லைப்பகுதியில் ஏவப்பட்டதற்கான வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதே சமயம் ரஷ்யாவின் தாக்குதலை தடுக்க, உக்ரைன் அதனை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

    இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட்டு, பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நேட்டோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்கமீண்டும் அமெரிக்க தேர்தல் களத்தில் குதிக்க போகும் டொனால்ட் ட்ரம்ப்! வெளியான அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....