Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'அதிமுகவின் திட்டங்களை திமுக நிறுத்துகிறது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    ‘அதிமுகவின் திட்டங்களை திமுக நிறுத்துகிறது’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

    எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, மக்களிடம் இன்னல்கள் குறித்து விசாரித்தவர், நிவராண உதவிகளையும் வழங்கினார். 

    இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘ஏழைகள் எப்போது பாதிக்கப்பட்டாலும் அப்போது அதிமுக அவர்களுடன் துணை நிற்கும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகளில் 2 முறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். 

    மேலும், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட ஏழைகளுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து படிப்படியாக நிறுத்தி வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

    முன்னதாக, கடந்த திங்கட் கிழமை சென்னை நகர்ப்புற பகுதிகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி, ‘ சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என திமுக அரசு பொய் சொல்கிறது’ என குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்கஅந்தமானுக்கான விமா சேவை 18-ஆம் தேதி வரை ரத்து; காரணம் என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....