Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதலைநகர் தில்லியில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

    தலைநகர் தில்லியில் நிலநடுக்கம்; வீதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள்

    தலைநகர் தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் நிலநடுக்கம் உணர்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தலைநகர் தில்லியில் நேபாளத்தை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, இன்று மதியம் 2.28 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

    தேசிய புவியியல் ஆய்வு மையத்தின்படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமார் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை நீடித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு தில்லிக்கு அருகிலுள்ள உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மதியம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் தில்லியில் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். இச்சம்பவத்தால் தில்லியின் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    தற்போதுவரை, இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 

    கட்டுக்கட்டாக பணத்தை வீசிய மர்ம நபர்.. பணத்தை பிடிக்க ஓடிய மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....