Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உலகளவில் இத்தனை கோடி வசூலா....அசரவைக்கும் பொன்னியின் செல்வன்!

    உலகளவில் இத்தனை கோடி வசூலா….அசரவைக்கும் பொன்னியின் செல்வன்!

    பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன். 

    இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. 

    தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வப்போது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.

    இதையும் படிங்க:தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

    இதனை தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரொமோஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது. 

    மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளிவந்தது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல்பாடலும் இடம்பெற்றிருந்தது. மேலும், திரைப்படம் வெளியானதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

    இதைத்தொடர்ந்து, பொன்னியின் செல்வன் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி வசூல் புரிந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....